Monday, January 28, 2013

கீழக்கரை இளம் மாணவரின் தொடர் சாதனைகள் - 3 டன் எடை கொண்ட வாகனத்தை இழுத்து வியப்பில் ஆழ்த்தினார் !

கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி பள்ளியின் 20 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று (28.01.2013) காலை சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஷரிபாஅஜீஸ் தலைமை வகித்தார். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹக்பீல் மரைக்கா (வயது 11), மூன்றரை டன் எடை கொண்ட மகேந்திரா வேனை இடுப்பில் கயிற்றை கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்கள் பெற்றார். இந்த விழாவில், கீழக்கரை டிஎஸ்பி சோமசேகர், தலைமையாசிரியர் சாகிராபானு, சீதக்காதி அறக்கட்டளை துணை மேலாளர் சேக்தாவூது, தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர். சுமையா கலந்து ஆகியோர்கள் கொண்டனர். 



மாணவர் ஹக்பீல் மரைக்கா, இது தவிர கராத்தே வகுப்பில் கிரீன் பெல்ட் பெற்றுள்ளார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் நடந்த கராத்தே (குமித்தே பிரிவில்) போட்டியில் ஹக்பீல் மரைக்கா முதலிடம் பெற்றிருந்தார்.  இது குறித்து அவர் கூறும் போது "பெற்றோரும் ஆசிரியர்களும் தொடர்ந்து ஊக்கம் அளித்ததால் தான் இந்த சாதனை படைக்க முடிந்தது. இறைவன் நாடினால் விளையாட்டுத் துறையில் இன்னும் பல சாதனைகள் புரிந்து நமது ஊருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்ப்பேன்" என்று தெரிவித்தார். 


இந்த இளம் மாணவர் ஹக்பீல் மரைக்கா, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். பசீர் அகமது அவர்களின் மகனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் வெற்றிகள் மென் மேலும் தொடர கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.