Tuesday, November 12, 2013

கீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு !

கீழக்கரை சேரான் தெருவை சேர்ந்த சர்புதீன் அவர்கள் பழைய மீன் மார்க்கெட் அருகே 'சர்புதீன் ஸ்டோர்' என்கிற பெயரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளாய், இங்கு தித்திக்கும் சுவையுடன், கமகமக்கும் அச்சார் ஊருகாய் வியாபாரம் செய்து வருகிறார். மாலை 6 மணி ஆகி விட்டாலே சூடு பிடிக்க ஆரம்பிக்கும் வியாபாரம் இரவு 9 மணி வரை தொடர்கிறது. பல்வேறு தெருக்களில் இருந்தும் தங்கள் நண்பர்களுடன் இளைஞர்கள் பட்டாளம், இந்த கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 



இது குறித்து 'அச்சார் புகழ்' சகோதரர் சர்புதீன் அவர்கள் கூறும் போது "அல்ஹம்துலில்லாஹ். வியாபாரம் சிறப்பாக உள்ளது. ஒரு நாளைக்கு சீனி அவரைக்காய், உருளைக்கிளங்கு, கத்தரிக்காய், கேரட், முருங்கக்காய் உள்ளிட்ட 15 கிலோ காய்கறிகளை கொண்டு சமைக்கப்படும் அச்சார் ஊறுகாய்,  சுடச் சுட வாடிக்கையாளர்களுக்கு  பரிமாறுகிறோம். ஏர்வாடி, வாலிநோக்கம் போன்ற வெளி ஊர்களில் இருந்தும் கூட எங்கள் அச்சார் ஊறுகாயை ருசி பார்க்க தினமும் வருகின்றனர். ஒரு கப் 5 ரூபாய்க்கு விற்பனை செய்து  வருகிறோம். உள்ளூரில் தொழில் செய்து குடும்பத்தாருடன் வசிப்பது சந்தோசமாக இருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்தார்.


இது குறித்து துபாயில் இருந்து ஊருக்கு விடுமுறையில் வந்திருக்கும் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த இந்த கடையின் புதிய வாடிக்கையாளர். பரக்கத் அலி அவர்கள் கூறும் போது "இங்கு கடை இருப்பதே எனக்கு தெரியாது.

ஏதோ அதிகமாக கூட்டம் முண்டியடிப்பதை கண்டு, சென்று  பார்த்தேன். அபோது தான் தெரிந்தது அச்சாரின் மகிமை.வாங்கி சுவைக்கும் போது அருமையான சுவையில் தித்திப்பாய் இருந்தது. 

சிறு வயதில் வெள்ளிக் கிழமைகளில் ஜும்மா பள்ளி வாசலில், நண்பர்களோடு விளையாடிக் கொண்டு வாங்கி தின்ற நியாபகம் வந்து விட்டது. நம் ஊரில் பொரித்த வகையறாக்களின் கடைகள் தான் அதிகம் காணப்படுகிறது. அதிகமாக அவற்றை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, இது போன்ற சத்துள்ள காய்கறிகள் நிறைந்த அச்சாரை சாப்பிட்டு பார்க்க வேண்டும்" என்று அச்சாரை சுவைத்தவாறே, நம்மையும் ருசி பார்க்க தூண்டும் விதமாக பேசினார்.

சகோதரர் சர்புதீன் அவர்களின் அச்சார் வியாபாரம் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

Sunday, September 29, 2013

கீழக்கரை வடக்குத் தெரு நண்பர்கள் முயற்சியில் கும்பகோணத்தில் புதியதோர் உதயம் - 'டெல்டா' ஹார்டுவேர் & ஷோ ரூம் !

கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த (மூன்று நண்பர்கள்) சின்ன அலி என்ற சம்சுல் ரஹ்மான், ரியாஸ் மற்றும் சீனி சுல்தான்  ஆகியோர்களின் முயற்சியில், 'டெல்டா ஹார்டுவேர்' என்கிற பெயரில் புதியதோர் பிரத்யேக ஷோ ரூம் மற்றும் விற்பனையகம், நேற்று (29.09.2013) கும்பகோணம் சாரங்கபாணி தெற்குத் தெருவில்  திறக்கப்பட்டுள்ளது.




கீழக்கரை நண்பர்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்படும் ஹார்டுவேர் நியாயமான விலையில் எங்களிடம் வாங்கி பயன் பெறலாம். தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு மின் உபகரணங்களை ஆர்டர் செய்யலாம். கீழக்கரைக்கு நல்ல முறையில் அனுப்பித்  தரப்படுகிறது. 


இவர்களுடைய தொழில் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :  


Friday, September 27, 2013

கீழக்கரை அருகே தென்னந்தோப்பில் ஒரு புதிய அசைவ உணவகம் - K 2 பார்டர் கடை !

கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த சகோதரிகள் மரியம் மற்றும் பாத்திமா மர்சூக் ஆகியோர்கள் ஒன்றிணைந்து கீழக்கரை - ஏர்வாடி சாலையில் (முள்ளுவாடி) 'K 2 பார்டர் கடை' என்ற பெயரில் புதிய அசைவ உணவகம் ஒன்றினை துவங்கி உள்ளனர். கடந்த 15.09.2013 அன்று திறப்பு விழா கண்ட இந்த உணவகத்தின் சிறப்பம்சமாக, அசைவப் பிரியர்கள் மனம் மகிழும் முகமாக அனைத்து அசைவ உணவு வகைகளும் பரிமாறப்படுகிறது. இதனால் கீழக்கரை நகரில் இருந்து தினமும் நண்பர்கள் கூட்டம், அசைவ உணவு வகைகளை சுவைக்க அலை மோதுகிறது. 




தென்னை மரங்கள் சூழ, நடுவில் அமையப் பெற்றிருக்கும் இந்த உணவகத்தில் காற்றோட்டமாக அமர்ந்து, இயற்கை சூழலில் பசியாறும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, குளுமை தரும் ஓடுகள் பொருத்தப்பட்ட தனி அறைக்குள் குடும்பத்தாருடன் அமர்ந்து சாப்பிடும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இங்கு திறமையான சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைக்கப்படும் அனைத்து உணவு வகைகளும், கீழக்கரை நண்பர்களால் சுடச் சுட சுவைக்கப்படுகிறது. 




சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, தந்தூரி சிக்கன் வகைகள், பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மதிய சைவ உணவு வகைகள், சூப் வகைகள், அரபியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகள், கபாப், பழ ரச வகைகள், மில்க் சேக் வகைகள், ஐஸ் கிரீம் வகைகள் உடனுக்குடன் கிடைக்கிறது. ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே சப்ளை செய்யும் வசதியும் உள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர்களுள்  ஒருவரான சகோதரி மரியம் அவர்கள் பிரபல ETA நிறுவன இயக்குனர் MD சலாஹுத்தீன் அவர்களின் மகளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீட்டிலிருந்தே உணவு வகைகளை ஆர்டர் செய்ய  : 9626080800

இவர்களுடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, September 17, 2013

உயரம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை புரியும் கீழக்கரை மாணவர்! !

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைதெரு பகுதியை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில் (15) இவர் சென்னை பிஷப் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பயின்று வருகிறார். இவரது தந்தை நூஹ் இப்ராஹிம் ஆவார். உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஆர்வமுடைய இவர் ஜீனியர் பிரிவிலான போட்டிகளில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் பங்கேற்று உயரம் தாண்டும் போட்டிகளில் இளம் வயதிலேயே சாதனைகள் படைத்து வருகிறார்.


 
தேசிய அளவில் பெற்ற வெற்றிகள்

2012ம் ஆண்டு கொச்சினில் நடைபெற்ற ஜீனியர் தடகள போட்டியில் 2ம் இடம் பெற்றார். 1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.

2012ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார். 1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.

2012ம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார். 1.88 மீட்டர் உயரம் தாண்டினார்.

2013ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற போட்டியில் 2ம் இடம் பெற்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டினார்.


 
மாநில அளவிலான போட்டிகளில் பெற்ற வெற்றிகள்

 2012ம் ஆண்டில் கிருஸ்ணகிரியில் நடைபெற்ற போட்டிகளில் தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்.

2012-2013ம் ஆண்டுகளில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான விழா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.78 மீட்டர் தாண்டி முதலிடம் பெற்றார்.

2013ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற 28வது ஜீனியர் அளவிலான போட்டியில் 1.98 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து  முதலிடம் பெற்றார்.


கீழக்கரை நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வரும் மாணவர் முஹம்மது ஆகில், இன்னும் பல உலகளாவிய வெற்றிகளை குவிக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது குறித்து மாணவர்  முஹம்மது ஆகில் கூறியதாவது,

இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும். இறைவன் அருளாளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,பயிற்சியாளர்கள் தரும் ஊக்கத்தினால் என்னால் இதில் ஈடுபட முடிகிறது. உயரம் தாண்டுதலில் உலக அளவில் நம் நாட்டின் சார்பில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆவல்.

தகவல் மற்றும் படங்கள் : கீழக்கரை டைம்ஸ்

Thursday, August 22, 2013

கீழக்கரை அன்பர்களின் முயற்சியில் ஈரோட்டில் 'விரைவில்' திறப்பு விழா காண இருக்கும் 'லிம்ராஸ் கேலக்சி டவர்ஸ்' - பிரம்மாண்ட 'லைடிங்க்ஸ்' ஷோ ரூம் & விற்பனையகம் !

கீழக்கரை கோக்கா அஹமது தெருவைச் சேர்ந்த ஹமீது ஹுமாயூன் அவர்களின்  (பல்லாத்தா குடும்பத்தார்) மற்றும் அம்பலார் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்கிற மறைக்கா (மானா கானா குடும்பத்தார்) ஆகியோர்களின் முயற்சியில், 'லிம்ராஸ் கேலக்சி டவர்ஸ்' என்கிற பெயரில் ஒரு மாபெரும்  'லைடிங்க்ஸ்' ஷோ ரூம் மற்றும் விற்பனையகம், விரைவில் ஈரோடு கிருஷ்ண செட்டி வீதியில் திறக்கப்பட உள்ளது. இவர்களால் ஏற்கனவே ஈரோடு சக்தி ரோட்டில் 'லிம்ராஸ் எலக்ட்ரிகல் ஏஜென்சி' என்கிற பெயரில் துவங்கப்பட்டு, வெள்ளி விழா நோக்கி சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 



இது குறித்து நம்மிடையே பேசும் போது 'வெளி நாடுகளுகளுக்கு சென்று சமாபதிப்பதை விடுத்து, நம் உள்  நாட்டிலேயே தொழில் துவங்கி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 1989 ஆண்டு ஈரோட்டில் 'லிம்ராஸ் எலக்ட்ரிகல் ஏஜென்சி' என்கிற பெயரில் துவங்கினோம். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகிய கண் கவர் லைடிங்க்ஸ் சாதனங்களை, தமிழ் நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மொத்த விற்பனை செய்து வருகிறோம்.



இறைவன் அருளால் தற்போது அதன் கிளை நிறுவனமாக ஈரோடு கிருஷ்ண செட்டி வீதியில் 'லிம்ராஸ் கேலக்சி டவர்ஸ்'  விரைவில் திறக்கப்பட உள்ளது. கீழக்கரை நண்பர்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்படும் லைடிங்க்ஸ் சாதனங்களை, நியாயமான விலையில் எங்களிடம் வாங்கி பயன் பெறலாம். தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு மின் உபகரணங்களை ஆர்டர் செய்யலாம். கீழக்கரைக்கு நல்ல முறையில் அனுப்பித் தருகிறோம்.

எங்களிடம் கீழ் காணும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மின் சாதனப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருக்கிறோம்.

1)  Mini Modular switches
2)  Metal Box switches in all leading brands
3)  Wiring Cables
4)  Fans
5)  Water Heater
6)  Fancy Lights,Chandelier,Cristal lights,MH Fitting,canceled fitting Etc.
7)  LED Street Lights
8)  Tube Lights(LED),CFL Bulbs
9)  Remote Switches&Censor Switches


இறைவன் நாடினால், விரைவில் திறப்பு விழா நடை பெற இருக்கும், எங்கள் நிறுவனத்திற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறும், தொடர்ந்து ஆதரவு தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இவர்களுடைய தொழில் செழித்தோங்கி, இன்னும் பல கிளைகளை கீழக்கரை நகரில் மட்டுமல்லாது நாடெங்கிலும் விரைவில் நிறுவிட, கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :  96004 77226 / 9842878674 / 9842978674/ 0424 - 2217746 / 0424 - 2217747

FACE BOOK COMMENTS : 
  

Sunday, August 18, 2013

கீழக்கரையில் புதியதோர் உதயம் 'A.M.S.பெட்ரோல் பங்க்' - திறப்பு விழாவில் கீழக்கரை முக்கியஸ்தர்கள் திரளாக பங்கேற்பு !

கீழக்கரை இராமநாதபுரம் சாலையில் முகம்மது சதக் அறக்கட்டளை நினைவு வளைவு அருகாமையில், 'A.M.S.பெட்ரோல் பங்க்' என்கிற பெயரில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் இந்தியன் ஆயிலின் புதிய  விற்பனையகம், இன்று (18.08.2013) மாலை 4.30 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. இதனை கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த, சென்னை ராயல் குழுமத்தின் நிறுவனர். ஜனாப். K.T.M.H. அமீர் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.   





இந்த நிகழ்ச்சிக்கு விற்பனையகத்தின் உரிமையாளர் ஜனாப். A.M.S.சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் தலைமை ஏற்று இருந்தார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை மேலாளர். திரு.கார்த்திக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மதுரை முஹைதீன் ஆண்டவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர், தொழிலதிபர் ஜனாப். அப்துல் பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 




 
மேலும் இந்த திறப்பு விழா நிகழ்விற்கு இராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கீழக்கரை முக்கியஸ்தர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜனாப். அபூபக்கர் அலி அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்.

A.M.S.பெட்ரோல் பங்க் நிறுவனத்தினருடைய தொழில் செழிக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

படங்கள் மற்றும் தகவல் : ரோட்டரியன். இஞ்சினியர். ஆசாத் ஹமீத் அவர்கள்

FACE BOOK COMMENTS : 

 Jamaludeen Jamal, Mohammed Idrees, Love Twins and 37 others like this.