Monday, May 27, 2013

கீழக்கரை மறைக்காஸ் டூர்ஸ் & டிராவல்ஸின் மற்றுமொரு இனியதோர் துவக்கம் - கீழக்கரையிலிருந்து சென்னைக்கு 'டெய்லி பஸ் சர்வீஸ்' !

கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், சென்னை விமான நிலையம் வழியாக வெளிநாடு செல்பவர்களும், மருத்துவ நோக்கத்திற்காகவும், வேலை நிமித்தமாகவும் சென்னைக்கு பயணிப்பவர்களும், அதிகளவில் பேருந்தில் செல்வதையே விரும்புகின்றனர். 



இதனால் ஏற்கனவே உள்ளூரிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் இருக்கைகள் கிடைக்காமல் பல நேரம் பயணிகள் திணறிப் போகிறார்கள். இதனை களையும் நல்ல நோக்கோடு, தற்போது கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (வள்ளல் சீதக்காதி லேன் சாலையில்) செயல்பட்டு வரும் மறைக்காஸ் டூர்ஸ் & டிராவல்ஸின் மற்றுமொரு இனியதோர் துவக்கமாக கீழக்கரையிலிருந்து சென்னைக்கு 'டெய்லி பஸ் சர்வீஸ்' கடந்த சனிக்கிழமை (25.05.2013) அன்று துவங்கப்பட்டு டிக்கெட் முன் பதிவுகள் நடைபெற்று வருகிறது.


மேலும் சென்னைக்கு பார்சல் சர்வீசும் நல்ல முறையில், மிக குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிராவல்ஸின் முதன்மை சேவையாக ஹஜ், உம்ரா சர்வீஸ் சிறப்பாக செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


'மறைக்காஸ் ஹஜ், உம்ரா சர்வீஸ்' நிறுவனம் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

சென்னைக்கு செல்ல டிக்கெட் முன் பதிவு செய்ய அழைக்க வேண்டிய அலைப் பேசி எண் :
பசீர் அஹமது : 96294 45858

No comments:

Post a Comment