Thursday, October 25, 2012

கீழக்கரையில் ஒரு புதிய துவக்கம் - 'நியூ சிந்துபாத் சூப்பர் மார்க்கெட்' !

கீழக்கரை நெய்னா முஹம்மது தண்டையல் தெருவில் 'நியூ சிந்துபாத் சூப்பர் மார்க்கெட்' என்ற பெயரில் பல்பொருள் அங்காடி  ஒன்றினை, கருப்பட்டிக்காரத் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் சிந்துபாத் ஹபீப் முஹம்மது, ஆனா, ஜகுபர் ஆகியோர்கள் கூட்டாண்மையாக  ஒன்றிணைந்து, இன்று வியாழக்கிழமை (25.10.2012) காலை துவங்கியுள்ளனர். இவர்கள் மூவரும் துபாயில் பல்லாண்டு காலம் பணி புரிந்து விட்டு, தற்போது சொந்த ஊரில் தொழில் துவங்கி இருப்பது  மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஹபீப் அவர்களின் மூத்த சகோதரர் மறைந்த மர்ஹூம். 'சிந்துபாத்' சீனி முஹம்மது அவர்கள், கடந்த 1994 ஆம் வருடம் சின்னக்கடைத் தெருவில் 'சிந்துபாத் சிறப்பங்காடி' என்ற பெயரில் பல் பொருள் அங்காடி வியாபாரம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 







இது குறித்து சிந்துபாத் ஹபீப் அவர்கள் கூறும் போது "எங்களது சூப்பர் மார்கெட்டில் அனைத்து மளிகை சாமான்களும் நியாயமான விலையில் கிடைக்கும். இவை தவிர ஐஸ் கிரீம் வகைகள், பால் பொருள்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், அரிசி வகைகள், காய்கறி சாமான்கள், ஸ்டேசனரி பொருள்கள், பிளாஸ்டிக் சாமான்கள், அன்றாட வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். மேலும் எங்களிடம் தொலைபேசி ஆடர்களின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது. அனைவரும் வருகை தந்து, தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :  'சிந்துபாத்' ஹபீப் முஹம்மது - 7200128888, 7200129999

Saturday, August 18, 2012

கீழக்கரை அபியா ஆப்டிகல்ஷின் நோன்புப் பெருநாள் ஆஃபர் - காண்டாக்ட் லென்ஸ் மேளா !

கடந்த சில மாதங்களுக்கு முன் கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த அன்வர் ஹுசைன் அவர்களால் முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) 'அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்' என்ற பெயரில் கண்ணாடி மற்றும் வெளி நாட்டு சாமான்கள்  விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது நோன்புப் பெருநாளை முன்னிட்டு காண்டாக்ட் லென்ஸ் ஆபர் போடப்பட்டுள்ளதாக, இவர்கள் வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து அன்வர் ஹுசைன் அவர்கள் கூறுகையில் "தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆபர் தவிர, எங்களிடம் புதிய மாடல் மூக்குக் கண்ணாடிகள், தரமான   வேலைப்பாடுகளுடன் கூடிய கேரண்டி கவரிங் மற்றும் பேன்சி கலக்சென்கள், அழகிய கைகடிகாரங்கள், கோடாலித் தைலம், ஐஸ் ஓடிகொலான், சுவை மிகுந்த சாக்லட்டுகள் உட்பட அனைத்து வெளி நாட்டு சாமான்களும், நியாயமான விலையில் கிடைக்கும். அனைவரும் எங்கள் கடைக்கு வருகை தந்து மேலான ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

                                தொடர்புக்கு : அன்வர் ஹுசைன் - 04567 324343,  8870433696

Friday, August 17, 2012

கீழக்கரையில் மாசி ஊறுகாய் தயாரிப்பில் முன்னோடி - வெள்ளி விழாவை நோக்கி 'S .M. மாசிக் கடை' !

கீழக்கரை கிழக்குத் தெரு முஸ்லீம் பஜாரில் 'S.M. மாசிக் கடை' என்ற பெயரில் ஊறுகாய் சிறப்பங்காடியினை, பருத்திக்காரத் தெருவைச் சேர்ந்த S.M.கலீல் ரஹ்மான் அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி, நார்த்தங்காய் என்று விதவிதமான சைவ ஊறுகாய்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் வாங்கி ருசிக்கும் ஊறுகாய்களின் சுவையில் சொக்கி நிற்பவர்கள் ஏராளம்.

இங்கு எங்கும் கிடைக்காத இறால், மாசி, நெய் மீன், நெத்திலி மீன் போன்ற அசைவ ஊறுகாய் வகைகளுக்கும் பஞ்சமில்லை. கீழக்கரை தொதல், சீப் பணியத்திற்கு அடுத்தபடியாக இப்போது மீன் ஊறுகாய்களும் பிரபலமாகி வருகிறது. வளைகுடா நாடுகளின் அரபுக்களின் விருப்பப் பட்டியலில் தற்போது இந்த அசைவ ஊறுகாய்களும் இடம் பெற்று விட்டது. வெளி நாட்டில் வசிக்கும் நம் கீழக்கரைவாசிகள், ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும் போதும், இந்த அரபு மக்களுக்கு மீன் ஊறுகாய்களை வாங்கி செல்லாமல் இருப்பது இல்லை.


இது குறித்து S.M.கலீல் ரஹ்மான் அவர்களிடம் கேட்ட போது "நாங்கள் தயாரிக்கும் அனைத்து அசைவ ஊறுகாய்களும் மூன்று மாதம் வரை கெடாது என்றாலும், மூன்றே நாளில் காலியாகி விடுவதே, எங்கள் ஊறுகாயின் இரகசியம். ஒரு கிலோ இறால், நெய் மீன், நெத்திலி ஊறுகாய்களுக்கு ரூ.550க்கும் மற்றும் மாசி ஊறுகாய் ரூ.600க்கும் விற்கப்படுகிறது. ஏற்றுமதி தரத்தில் உள்ள மீன்களை மட்டுமே, ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்துகிறோம்.

மாசி ஊறுகாய்க்கு வெளி நாட்டில் அமோக வரவேற்பு உள்ளது. விரைவில் கணவாய், நண்டு ஊறுகாய்களை அறிமுகப் படுத்த உள்ளோம். மேலும் எங்களிடம் கணவாய் கருவாடு, மாசி மசாலா மிக்ஸ், நெத்திலி கருவாடு பொரியல் போன்றவைகள் நியாயமான விலையில் தர மிகுதியோடு கிடைக்கும். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளி விழாவை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும், எங்கள் விற்பனயகத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

தொடர்புக்கு :  S.M.கலீல் ரஹ்மான் - 9597042523

Tuesday, August 14, 2012

கீழக்கரையில் ஒரு புதிய துவக்கம் - 'பிஸ்மி மளிகை & எலக்ட்ரிகல்ஸ்' விற்பனையகம் !

கீழக்கரை கிழக்குத் தெரு முஸ்லீம் பஜாரில் 'பிஸ்மி மளிகை & எலக்ட்ரிகல்ஸ்' என்ற பெயரில் மளிகை கடை மற்றும் எலக்ட்ரிகல்ஸ் விற்பனையகம் ஒன்றினை, மேலத் தெரு மணியார் வெட்டை பகுதியைச் சேர்ந்த பாதுஷா அவர்கள், கடந்த வியாழக்கிழமை (09.08.2012)அன்று துவங்கியுள்ளார். இவர் பல்லாண்டு காலம் நாகூர் அருகே உள்ள வேளாங்கன்னியில் பாதுஷா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




இது குறித்து பாதுஷா அவர்கள் கூறும் போது " எங்களது மளிகை கடையில் அனைத்து மளிகை சாமான்களும் நியாயமான விலையில் கிடைக்கும். இவை தவிர ஸ்டேசனரி பொருள்கள், பிளாஸ்டிக் சாமான்கள், மற்றும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். மேலும் எங்களிடம் அனைத்து விதமான எலக்ட்ரிகல் சாமான்களும் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும். அனைத்து பொருள்களும் தொலைபேசி ஆடர்களின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்தும் தருகிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று தெரிவித்தார்.



இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.

தொடர்புக்கு :  பாதுஷா  -  76399 01783, கடை - 04567 242853

Sunday, June 17, 2012

கீழக்கரையில் புதுப் பொலிவுடன் 'மோகன் எலக்ட்ரானிக்ஸ்' விற்பனையகம் !

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (பீஸா பேக்கரி எதிரில்) கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் பழுது நீக்கும் பணியினை சிறப்பாக செயல்படுத்தி வரும் 'மோகன் எலக்ட்ரானிக்ஸ்' சேவைத் தொழிலகம், தற்போது புதுப் பொலிவுடன் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விற்பனையகத்தையும் திறந்துள்ளது.



இது குறித்து  இதன் உரிமையாளர் மோகன் அவர்கள் கூறும் போது "எங்களின் சிறப்பான சேவையில் அனைத்து வகையான PEN DRIVE களும், MEMORY CARD களும், மிக மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. ( MEMORY CARD : 2 GB - Rs.120, 4GB - Rs.150, 8 GB - Rs.250 & PEN DRIVE : 4GB - Rs.250,  8GB - Rs.350), i POD (Rs.200), RELIANCE USB MODAM (Rs.999), MTS USB MODAM (Rs.675) இது தவிர தொடர் மின் வெட்டினை சமாளிக்கும் வகையில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து சுழலக் கூடிய RECHARGEABLE FAN (விலை - Rs.1500) மற்றும் MINI UPS (விலை - Rs.1600) கிடைக்கும்.


NOKIA, SAMSUNG, MICROMAX போன்ற பிராண்டட் கம்பெனி மொபைல்களும், கலர் டிவி, அயர்ன் பக்ஸ், கரண்ட் அடுப்பு (Rs.1750), சீலிங் பேன் போன்ற வீடு உபயோக பொருள்கள் அனைத்தும் வேறெங்கும் கிடைக்காத, மிக குறித்த விலையில் கிடைக்கும். மேலும் எங்களிடம் DVD PLAYERS, HOME THEATER பல்வேறு மாடல்களில் விற்பனைக்கு வைத்துள்ளோம். அனைத்து மொபைல் போன்களுக்குரிய உதிரி பாகங்களும் நியாயமான விலையில் கிடைக்கும். அனைத்து டிஷ்- களுக்கான ரீ ஜார்ஜ்களும் (SUN DTH, DISH TV, AIRTEL, DTH) உடனுக்குடன் செய்து தரப்படும். அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று ஆர்வமுடன் தெரிவித்தார்.

இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.

தொடர்புக்கு :  திரு. மோகன் - 96262 62889

Saturday, June 9, 2012

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் கராத்தே போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை !

இராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர். சதாம் ஹூசைன் சாம்பியன் பட்டம் வென்று நம் நகருக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரை பாராட்டி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் பரிசு வழங்கினார். கல்வி அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் முகம்மது காசீம், முகம்மது ஜமால் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ், தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஜோசப் சார்த்தோ, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.




இது போன்ற சாதனைகளை மென் மேலும் குவித்து, ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்து கொண்டு நம் நகருக்கும், இவர் பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்க்க எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி : கீழக்கரை டைம்ஸ் 

கீழக்கரை 'மூர் அணியினர்' வாலிபால் போட்டியில் வெற்றி வாகை - நகர் மக்கள் மகிழ்ச்சி !

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் கீழக்கரை மூர் அணி கோப்பையை கைப்பற்றியது.



இது குறித்து கீழக்கரை மூர் விளையாட்டு கிளப்பின் நிர்வாகி ஹசனுதீன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இராமநாதபுரம் காவல்துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் வாலிபால் இறுதிப்போட்டியில் முகவை அணியை மூர் கிளப் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. அதே போல் கூடைப்பந்து போட்டியில் மூர் கிளப் இறுதி போட்டி வரை இடம் பெற்று இரண்டாமிடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற ந‌ம‌தூர் அணி வீர‌ர்க‌ளுக்கும் ஆத‌ர‌வு தெரிவித்த‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றியையும், வாழ்த்துக்க‌ளையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

 வெற்றி வாகை சூடி, கோப்பையை கைப்பற்றிய வாலிபால் அணி வீரர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி : கீழக்கரை டைம்ஸ்

Tuesday, June 5, 2012

கீழக்கரையில் தொடர் மின்வெட்டை சமாளிக்க புதிய வரவாக 'கண்மணி பவர் டெக்' நிறுவனம் !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை சின்னக் கடைத் தெருவில்  (பழைய முத்தலிபு ஹாஜியார் அரிசி கடை இருந்த இடத்தில்) தெற்குத் தெருவைச் சேர்ந்த நண்பர். முஹம்மது ஜமீல் ஹுசைன் அவர்களால் 'கண்மணி பவர் டெக்' என்ற பெயரில் மின்சாரத்துக்கு மாற்றான தொழிலகம் திறக்கப்பட்டுள்ளது. இவர் கீழக்கரை கண்மணி ஹார்டுவேர்ஸ் சீனி அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முஹம்மது ஜமீல் ஹுசைன் அவர்கள் கூறும் போது "நம் கீழக்கரை நகரில் தொடர் மின் வெட்டிலிருந்து பாதுகாப்பு பெரும் பொருட்டு மாற்று ஏற்பாடாக, இந்த தொழிலை துவங்கி இருக்கிறோம். எங்களிடம் கிடைப்பது போன்ற வாரண்டியுடன் கூடிய பேட்டரி, இன்வெட்டர்களை  வாங்குவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, இராமநாதபுரம் அல்லது மதுரை தான் செல்ல வேண்டி இருந்தது. இதனால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.



தற்போது எங்களது தொழிலகத்தில் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேட்டரீஸ் மற்றும் இன்வெர்டர்கள்  விற்பனைக்கு வைத்திருக்கிறோம். குறிப்பாக, எங்களிடம் லுமினாஸ், மைக்ரோடெக், ABM  போன்ற தலை சிறந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் அனைத்தும் மிகக் குறைவான விலையில் கிடைக்கும். இது மட்டுமல்லாது அனைத்து வகையான வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகளும் நியாயமான விலையில் கிடைக்கிறது.



மேலும் தங்கள் இல்லங்களுக்கே வந்து வயரிங் மற்றும் பேட்டரிகளை பொருத்துவது சம்பந்தமான அனைத்து சேவைகளும் சிறப்பாக செய்து தருகிறோம். பேட்டரிகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் சமயம், தொலைபேசியில் அழைத்தால், உடனுக்குடன்  தங்கள் வீடுகளுக்கே வந்து சரி செய்து தருகிறோம். அனைவரும் எங்கள் தொழிலகம் சிறக்க ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :  முஹம்மது ஜமீல் ஹுசைன் 9444782310 / 9488736310

Friday, April 27, 2012

இராமநாதபுரத்தில் கல்விச் சேவையில் ஓர் 'புதிய பரிமாணம்' - 'முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளி' காணொளி (வீடியோ காட்சி)

கீழக்கரையில் கல்விச் சேவைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு முன்னோடியாகத் திகழும், 'முஹம்மது சதக் அறக்கட்டளையின்' மற்றுமொரு மைல் கல்லாக, இராமநாதபுரத்தில் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளி  கடந்த  2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, ஆற்றல் மிக்க எதிகால இளைய தலைமுறையினரை வார்த்தெடுக்கும் அறிவுப் பட்டறையாக திகழ்ந்து வருகிறது. இப்பள்ளி ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில்  அமைந்துள்ளது.


 

முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளியின் காணொளி !
 ( வீடியோ காட்சி )

இது குறித்து இப்பள்ளியின் தாளாளர் ஜனாப். அல்ஹாஜ். S .M .முஹம்மது யூசுப் சாகிபு அவர்கள் கூறுகையில் "நம் பகுதியில் எதிர் காலத் தூண்களாகிய மாணவ மணிகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே எங்கள் முதன்மைக் குறிக்கோள். ஆங்கிலோ இந்தியன் பேராசிரியர்களைக் கொண்டு 'ஸ்போக்கன் இங்க்லீஷ்' வகுப்புகள்  நடத்தப்படுவதால், மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது நிச்சயமாகிறது. 

கலை, விளையாட்டுகள், யோகா  பயிற்சிகள், கராத்தே வகுப்புகள் போன்றவைகளும் சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. கீழக்கரையிலிருந்து  மாணவ, மாணவிகள் வருவதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது. தற்போது அட்மிசன் நடைபெற்று வருகிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மிகவும் தங்கியே திகழும் நம் இராமநாதபுரம் மாவட்டத்தில், இது போன்ற அறிவுசார் முயற்சிகளின் ஆணி வேர்கள் மென் மேலும் கல்விப் பணிகளில் செழித்தோங்க எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அட்மிசன் தொடர்புக்கு :  04567 232010 / 232013 (OR)  9841521250

Wednesday, April 25, 2012

கீழக்கரையில் புதிய உதயம் - 'அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்' !

கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த அன்வர் ஹுசைன் அவர்களால் முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) 'அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்' என்ற பெயரில் கண்ணாடி மற்றும் வெளி நாட்டு சாமான்கள்  விற்பனையகம் கடந்த வாரம்  திறக்கப்பட்டுள்ளது.





இது குறித்து அன்வர் ஹுசைன் அவர்கள் கூறுகையில் "புதிய மாடல் மூக்குக் கண்ணாடிகள், தரமான   வேலைப்பாடுகளுடன் கூடிய கேரண்டி கவரிங் மற்றும் பேன்சி கலக்சென்கள், அழகிய கைகடிகாரங்கள், கோடாலித் தைலம், ஐஸ் ஓடிகொலான், சுவை மிகுந்த சாக்லட்டுகள் உட்பட அனைத்து வெளி நாட்டு சாமான்களும், நியாயமான விலையில் கிடைக்கும். அனைவரும் எங்கள் கடைக்கு வருகை தந்து மேலான ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புக்கு : அன்வர் ஹுசைன் - 04567 324343,  8870433696

Saturday, April 21, 2012

கீழக்கரையில் புதுப் பொலிவுடன் 'ரணா மொபைல்' விற்பனையகம் !

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) 'ரணா மொபைல்' என்ற பெயரில் மொபைல் சர்வீசுடன் கூடிய விற்பனையகம் கடந்த மாதம் புதுப் பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. கீழக்கரையில் மொபைல் சர்வீசின் முன்னோடியாகத் திகழும் ரணா மொபைல் கடந்த ஏழாண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




இது குறித்து  இதன் உரிமையாளர் ரிஸ்வான் அகமது அவர்கள் கூறும் போது "எங்களிடம் NOKIA, SAMSUNG, SONY ERICSSON போன்ற பிராண்டட் மொபைல்களும், G FIVE, LEPHONE, GLX, CITY CALL, AGTEL, XYTEL, CWING போன்ற அனைத்து வகையான சைனா மொபைல்களும் வேறெங்கும் கிடைக்காத மிக, மிக குறித்த விலையில் கிடைக்கும். 

 மேலும் அனைத்து மொபைல் போன்களுக்குரிய உதிரி பாகங்களும் நியாயமான விலையில் கிடைக்கும். எல்லா மாடல் போன்களும், நியாயமான சேவைக் கட்டணத்தில் சர்வீஸ் மற்றும் பழுது நீக்கி தரப்படும். அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று ஆர்வமுடன் தெரிவித்தார்.

தொடர்புக்கு : ரிஸ்வான் அகமது - 72000 00191

Monday, April 16, 2012

கீழக்கரையில் முத்திரை பதித்து வரும் 'கல்கத்தா சூப்பர் மார்க்கெட்' !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை போஸ்ட் ஆபீஸ் தெருவில்  (பாரத ஸ்டேட் பேங்க் அருகில்) பெத்தரி தெருவைச் சேர்ந்த நண்பர். சதக் அவர்களால் 'கல்கத்தா சூப்பர் மார்க்கெட்' என்ற பெயரில் கடை திறக்கப்பட்டுள்ளது. இவர் பல்லாண்டு காலம் துபாயில் GIORDANA நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 




இது குறித்து சதக் அவர்கள் கூறும் போது " எங்களது சூப்பர் மார்கெட்டில் அரிசி, பருப்பு, மசாலா, எண்ணெய் வகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் நியாயமான விலையில் கிடைக்கும். இவை தவிர ஸ்டேசனரி பொருள்கள், பிளாஸ்டிக் சாமான்கள், அழகு சாதனா பொருள்கள் மற்றும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

மேலும் ரூபாய் 1000 க்கு மேல் பொருள்கள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உபயோகமான பரிசுகள் பல காத்திருக்கிறது. அனைத்து பொருள்களும் தொலைபேசி ஆடர்களின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்தும் தருகிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.
தொடர்புக்கு :  சதக் -  9944164209

Monday, April 9, 2012

கீழக்கரையில் தொடர் மின் வெட்டால் புதிய தொழிலுக்கு மாறியவர் !

கீழக்கரையில் அறிவிக்கப்படாத பல மணி நேர மின் வெட்டு அமுலில் இருப்பதால், மின்சாரத்தை நம்பி தொழில் புரிந்த பலர், வேறு இலாபம் தரும் புதிய தொழில்களுக்கு மாறியுள்ளனர். அல்லது மின்சாரத்துக்கு மாற்றான தொழில்களை துவங்கியுள்ளனர்.
 
கீழக்கரை போஸ்ட் ஆபிஸ் தெருவில், புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த பவுசுல் அமீன் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 'கிங்ஸ் ஜெராக்ஸ்' என்ற பெயரில், மின்சாரத்தை மையமாக கொண்ட எஸ்.டி.டி, ஜெராக்ஸ், லேமினேசன், ஜாப் டைபிங் போன்ற தொழில்களை செய்து வந்தார். ஆனால் தற்போது நிலவும் தொடர் மின் வெட்டால் தன் கடையை 'கிங்ஸ் குழந்தைகள் உலகம்' என்ற பெயரில் பொம்மை கடையாக மாற்றியுள்ளார்.




இது குறித்து  அமீன் அவர்கள் கூறும் போது "தொடர் மின் வெட்டால், என்னுடைய தொழிலே நலிவடைந்து விட்டது.  இந்த புதிய யோசனையால், தற்போது விற்பனை நன்றாக இருக்கிறது. இடையிடையே கொஞ்சம் ஜெரக்ஸ் வியாபாரமும் நடக்கிறது.

என்னுடைய விற்பனையகத்தில் குழந்தைகளுக்கான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள் தவிர பெண்களுக்கான பேன்சி பொருள்கள், கேரண்டி கவரிங் சாமான்கள் போன்றவைகள் கிடைக்கும். அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புக்கு : பவுசுல் அமீன் - 9791549222 

Thursday, March 22, 2012

கீழக்கரையில் தொழில் துவங்கும் உள்ளூர்வாசிகள் - சபாஸ் அணிவகுப்பு !

நம் கீழக்கரை நகரில் தற்சமயம், பல புதிய கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. நம் சொந்தங்கள் காலம் முழுதும் வளைகுடாக்களில் வியர்வை சிந்தி உழைத்த பணத்தினை முதலீடாய் கொண்டு, உள்ளூரிலேயே தொழில் செய்ய முனைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

'பாத்திமா ஸ்டோர்'
என்ற பெயரில் மளிகை கடை ஒன்றினை, ஈசா தண்டையல் தெருவைச் சேர்ந்த ஆலிமுசா என்கிற முஹம்மது இபுராஹீம் அவர்கள் கீழக்கரை பைத்துல்மால் அருகில் நேற்று முன் தினம்  துவங்கி இருக்கிறார்.



இது குறித்து அவர் கூறும் போது "உள்ளூரிலேயே தொழில் செய்யும் போது, குறைந்த வருவாய் ஈட்டினாலும் மனம் நிறைவை தரும் என்று நம்புகிறேன். நல்ல தரமான மளிகை பொருள்கள் அனைத்தும் மிகச் சரியான விலையில் கிடைக்கும். இறைவன் நாடினால், இன்னும் ஒரு வார காலத்தில் டோர் டெலிவரி சேவையும் துவங்க இருக்கிறேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கீழக்கரை நெய்னா முஹம்மது தண்டையல் தெருவைச் சேர்ந்த ஹபீப் முஹம்மது அவர்களால் அதே தெருவில் (டாக்டர்.பக்ருதீன் கிளினிக் அருகில்) 'பரியா அபாயா'(கவரிங் மற்றும் பேன்சி கலெக்சன்) என்ற பெயரில் புதிய ஷோ ரூம் சென்ற வாரம் திறக்கப்பட்டுள்ளது.



இது குறித்து அவர் கூறுகையில் "புதிய வேலைப்பாடுகளுடன் கூடிய பர்தாக்கள், கவரிங் மற்றும் பேன்சி கலக்சென்கள் போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருள்களை நியாயமான விலையில் நமதூர் மக்களுக்கு தருகிறோம்.அனைவரும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


அதே போல் கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி பின் புறம் (பாரத் லேப் அருகில்) 'சோசியல் சூப் சென்டர்' என்ற பெயரில் கடந்த வெள்ளியன்று துவங்கப்பட்டது. இதனை தெற்குத் தெருவைச் சேர்ந்த செய்யது அபுதாகிர் அவர்கள் திறந்துள்ளார்.



இது குறித்து அவர் நம்மிடையே பேசும் போது " எங்களிடம் சுவையான ஆட்டுக் கால் சூப்பு, குடல், தலைக்கறி இடியாப்பம், மாட்டுக் கறி வறுவல் போன்ற உணவு வகைகள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கிடைக்கும். நீங்கள் ஒரு முறை இங்கு வருகை தந்தால், அடுத்து எங்களுடய நிரந்தர வாடிக்கையாளராகி விடுவீர்கள்" என்று விறு விறுப்பான வேலைகளுக்கு மத்தியில் தெரிவித்தார்.

புதிதாக தொழில் துவங்கி இருக்கும் அனைவருக்கும்  எங்களின் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் புதிதாக தொழில் துவங்கி இருப்பவர்களை ஊக்குவிக்கும் முகமாக, செய்திகளை புகைப்படத்துடன் salihhussain.ks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தந்தால், இந்த வலை தளத்தில் பதிவு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்.

முயற்சிகள் முடிவதில்லை... முயன்றால் வெற்றிகள் தொலைவில் இல்லை...