Thursday, March 22, 2012

கீழக்கரையில் தொழில் துவங்கும் உள்ளூர்வாசிகள் - சபாஸ் அணிவகுப்பு !

நம் கீழக்கரை நகரில் தற்சமயம், பல புதிய கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. நம் சொந்தங்கள் காலம் முழுதும் வளைகுடாக்களில் வியர்வை சிந்தி உழைத்த பணத்தினை முதலீடாய் கொண்டு, உள்ளூரிலேயே தொழில் செய்ய முனைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

'பாத்திமா ஸ்டோர்'
என்ற பெயரில் மளிகை கடை ஒன்றினை, ஈசா தண்டையல் தெருவைச் சேர்ந்த ஆலிமுசா என்கிற முஹம்மது இபுராஹீம் அவர்கள் கீழக்கரை பைத்துல்மால் அருகில் நேற்று முன் தினம்  துவங்கி இருக்கிறார்.



இது குறித்து அவர் கூறும் போது "உள்ளூரிலேயே தொழில் செய்யும் போது, குறைந்த வருவாய் ஈட்டினாலும் மனம் நிறைவை தரும் என்று நம்புகிறேன். நல்ல தரமான மளிகை பொருள்கள் அனைத்தும் மிகச் சரியான விலையில் கிடைக்கும். இறைவன் நாடினால், இன்னும் ஒரு வார காலத்தில் டோர் டெலிவரி சேவையும் துவங்க இருக்கிறேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கீழக்கரை நெய்னா முஹம்மது தண்டையல் தெருவைச் சேர்ந்த ஹபீப் முஹம்மது அவர்களால் அதே தெருவில் (டாக்டர்.பக்ருதீன் கிளினிக் அருகில்) 'பரியா அபாயா'(கவரிங் மற்றும் பேன்சி கலெக்சன்) என்ற பெயரில் புதிய ஷோ ரூம் சென்ற வாரம் திறக்கப்பட்டுள்ளது.



இது குறித்து அவர் கூறுகையில் "புதிய வேலைப்பாடுகளுடன் கூடிய பர்தாக்கள், கவரிங் மற்றும் பேன்சி கலக்சென்கள் போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருள்களை நியாயமான விலையில் நமதூர் மக்களுக்கு தருகிறோம்.அனைவரும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


அதே போல் கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி பின் புறம் (பாரத் லேப் அருகில்) 'சோசியல் சூப் சென்டர்' என்ற பெயரில் கடந்த வெள்ளியன்று துவங்கப்பட்டது. இதனை தெற்குத் தெருவைச் சேர்ந்த செய்யது அபுதாகிர் அவர்கள் திறந்துள்ளார்.



இது குறித்து அவர் நம்மிடையே பேசும் போது " எங்களிடம் சுவையான ஆட்டுக் கால் சூப்பு, குடல், தலைக்கறி இடியாப்பம், மாட்டுக் கறி வறுவல் போன்ற உணவு வகைகள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கிடைக்கும். நீங்கள் ஒரு முறை இங்கு வருகை தந்தால், அடுத்து எங்களுடய நிரந்தர வாடிக்கையாளராகி விடுவீர்கள்" என்று விறு விறுப்பான வேலைகளுக்கு மத்தியில் தெரிவித்தார்.

புதிதாக தொழில் துவங்கி இருக்கும் அனைவருக்கும்  எங்களின் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் புதிதாக தொழில் துவங்கி இருப்பவர்களை ஊக்குவிக்கும் முகமாக, செய்திகளை புகைப்படத்துடன் salihhussain.ks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தந்தால், இந்த வலை தளத்தில் பதிவு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்.

முயற்சிகள் முடிவதில்லை... முயன்றால் வெற்றிகள் தொலைவில் இல்லை...


2 comments:

  1. அருமையான தொகுப்பு. சொந்தங்களை பிரிந்து வருவாய் ஈட்டுவதற்காக கடல் கடந்து வேலை பார்க்கும் நண்பர்களுக்கு இந்த செய்தி தொகுப்பு மன உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கையை தரும். குறைவாக பணம் ஈட்டினாலும் தன் குடும்பத்தோடு வாழ்வதை அனைவரும் விரும்பும் வண்...ணம் தொழில் வளம் கீழக்கரையில் இருப்பது சிறப்புக்குரிய அம்சம் ! வரும் காலங்களில் ஊரில் உள்ள மற்ற பாரம்பரிய மிக்க கடைகளில் பேட்டி எடுத்து அவர்களின் உழைப்பு , தொழில் முறை பற்றிய செய்தி தொகுப்பை தந்தால் , கீழக்கரையின் தொழில் பாரம்பரியத்தை அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் . உங்களுடைய சமூக பணி மென்மேலும் சிறக்க அல்லாஹ் துணை புரிவான். இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  2. welcome 2 all, all others should follows this

    ReplyDelete