Monday, April 9, 2012

கீழக்கரையில் தொடர் மின் வெட்டால் புதிய தொழிலுக்கு மாறியவர் !

கீழக்கரையில் அறிவிக்கப்படாத பல மணி நேர மின் வெட்டு அமுலில் இருப்பதால், மின்சாரத்தை நம்பி தொழில் புரிந்த பலர், வேறு இலாபம் தரும் புதிய தொழில்களுக்கு மாறியுள்ளனர். அல்லது மின்சாரத்துக்கு மாற்றான தொழில்களை துவங்கியுள்ளனர்.
 
கீழக்கரை போஸ்ட் ஆபிஸ் தெருவில், புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த பவுசுல் அமீன் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 'கிங்ஸ் ஜெராக்ஸ்' என்ற பெயரில், மின்சாரத்தை மையமாக கொண்ட எஸ்.டி.டி, ஜெராக்ஸ், லேமினேசன், ஜாப் டைபிங் போன்ற தொழில்களை செய்து வந்தார். ஆனால் தற்போது நிலவும் தொடர் மின் வெட்டால் தன் கடையை 'கிங்ஸ் குழந்தைகள் உலகம்' என்ற பெயரில் பொம்மை கடையாக மாற்றியுள்ளார்.




இது குறித்து  அமீன் அவர்கள் கூறும் போது "தொடர் மின் வெட்டால், என்னுடைய தொழிலே நலிவடைந்து விட்டது.  இந்த புதிய யோசனையால், தற்போது விற்பனை நன்றாக இருக்கிறது. இடையிடையே கொஞ்சம் ஜெரக்ஸ் வியாபாரமும் நடக்கிறது.

என்னுடைய விற்பனையகத்தில் குழந்தைகளுக்கான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள் தவிர பெண்களுக்கான பேன்சி பொருள்கள், கேரண்டி கவரிங் சாமான்கள் போன்றவைகள் கிடைக்கும். அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புக்கு : பவுசுல் அமீன் - 9791549222 

1 comment: