Sunday, September 29, 2013

கீழக்கரை வடக்குத் தெரு நண்பர்கள் முயற்சியில் கும்பகோணத்தில் புதியதோர் உதயம் - 'டெல்டா' ஹார்டுவேர் & ஷோ ரூம் !

கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த (மூன்று நண்பர்கள்) சின்ன அலி என்ற சம்சுல் ரஹ்மான், ரியாஸ் மற்றும் சீனி சுல்தான்  ஆகியோர்களின் முயற்சியில், 'டெல்டா ஹார்டுவேர்' என்கிற பெயரில் புதியதோர் பிரத்யேக ஷோ ரூம் மற்றும் விற்பனையகம், நேற்று (29.09.2013) கும்பகோணம் சாரங்கபாணி தெற்குத் தெருவில்  திறக்கப்பட்டுள்ளது.




கீழக்கரை நண்பர்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்படும் ஹார்டுவேர் நியாயமான விலையில் எங்களிடம் வாங்கி பயன் பெறலாம். தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு மின் உபகரணங்களை ஆர்டர் செய்யலாம். கீழக்கரைக்கு நல்ல முறையில் அனுப்பித்  தரப்படுகிறது. 


இவர்களுடைய தொழில் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :  


Friday, September 27, 2013

கீழக்கரை அருகே தென்னந்தோப்பில் ஒரு புதிய அசைவ உணவகம் - K 2 பார்டர் கடை !

கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த சகோதரிகள் மரியம் மற்றும் பாத்திமா மர்சூக் ஆகியோர்கள் ஒன்றிணைந்து கீழக்கரை - ஏர்வாடி சாலையில் (முள்ளுவாடி) 'K 2 பார்டர் கடை' என்ற பெயரில் புதிய அசைவ உணவகம் ஒன்றினை துவங்கி உள்ளனர். கடந்த 15.09.2013 அன்று திறப்பு விழா கண்ட இந்த உணவகத்தின் சிறப்பம்சமாக, அசைவப் பிரியர்கள் மனம் மகிழும் முகமாக அனைத்து அசைவ உணவு வகைகளும் பரிமாறப்படுகிறது. இதனால் கீழக்கரை நகரில் இருந்து தினமும் நண்பர்கள் கூட்டம், அசைவ உணவு வகைகளை சுவைக்க அலை மோதுகிறது. 




தென்னை மரங்கள் சூழ, நடுவில் அமையப் பெற்றிருக்கும் இந்த உணவகத்தில் காற்றோட்டமாக அமர்ந்து, இயற்கை சூழலில் பசியாறும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, குளுமை தரும் ஓடுகள் பொருத்தப்பட்ட தனி அறைக்குள் குடும்பத்தாருடன் அமர்ந்து சாப்பிடும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இங்கு திறமையான சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைக்கப்படும் அனைத்து உணவு வகைகளும், கீழக்கரை நண்பர்களால் சுடச் சுட சுவைக்கப்படுகிறது. 




சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, தந்தூரி சிக்கன் வகைகள், பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மதிய சைவ உணவு வகைகள், சூப் வகைகள், அரபியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகள், கபாப், பழ ரச வகைகள், மில்க் சேக் வகைகள், ஐஸ் கிரீம் வகைகள் உடனுக்குடன் கிடைக்கிறது. ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே சப்ளை செய்யும் வசதியும் உள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர்களுள்  ஒருவரான சகோதரி மரியம் அவர்கள் பிரபல ETA நிறுவன இயக்குனர் MD சலாஹுத்தீன் அவர்களின் மகளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீட்டிலிருந்தே உணவு வகைகளை ஆர்டர் செய்ய  : 9626080800

இவர்களுடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, September 17, 2013

உயரம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை புரியும் கீழக்கரை மாணவர்! !

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைதெரு பகுதியை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில் (15) இவர் சென்னை பிஷப் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பயின்று வருகிறார். இவரது தந்தை நூஹ் இப்ராஹிம் ஆவார். உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஆர்வமுடைய இவர் ஜீனியர் பிரிவிலான போட்டிகளில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் பங்கேற்று உயரம் தாண்டும் போட்டிகளில் இளம் வயதிலேயே சாதனைகள் படைத்து வருகிறார்.


 
தேசிய அளவில் பெற்ற வெற்றிகள்

2012ம் ஆண்டு கொச்சினில் நடைபெற்ற ஜீனியர் தடகள போட்டியில் 2ம் இடம் பெற்றார். 1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.

2012ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார். 1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.

2012ம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார். 1.88 மீட்டர் உயரம் தாண்டினார்.

2013ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற போட்டியில் 2ம் இடம் பெற்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டினார்.


 
மாநில அளவிலான போட்டிகளில் பெற்ற வெற்றிகள்

 2012ம் ஆண்டில் கிருஸ்ணகிரியில் நடைபெற்ற போட்டிகளில் தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்.

2012-2013ம் ஆண்டுகளில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான விழா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.78 மீட்டர் தாண்டி முதலிடம் பெற்றார்.

2013ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற 28வது ஜீனியர் அளவிலான போட்டியில் 1.98 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து  முதலிடம் பெற்றார்.


கீழக்கரை நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வரும் மாணவர் முஹம்மது ஆகில், இன்னும் பல உலகளாவிய வெற்றிகளை குவிக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது குறித்து மாணவர்  முஹம்மது ஆகில் கூறியதாவது,

இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும். இறைவன் அருளாளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,பயிற்சியாளர்கள் தரும் ஊக்கத்தினால் என்னால் இதில் ஈடுபட முடிகிறது. உயரம் தாண்டுதலில் உலக அளவில் நம் நாட்டின் சார்பில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆவல்.

தகவல் மற்றும் படங்கள் : கீழக்கரை டைம்ஸ்