Sunday, April 14, 2013

கீழக்கரையில் ஒரு புதிய துவக்கம் - 'மறைக்காஸ் ஹஜ், உம்ரா சர்வீஸ்' !


கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த நண்பர்கள். பசீர் அஹமது, முஜீபுர் ரஹ்மான் மற்றும் சாலை தெருவைச் சேர்ந்த ஹாஜா அனீஸ் ஆகியோர்கள் ஒன்றிணைந்து முஸ்லீம் பஜாரில் (வள்ளல் சீதக்காதி லேன் சாலையில்) 'மறைக்காஸ் டூர்ஸ் & டிராவல்ஸ் ' என்ற பெயரில் பயண ஏற்பாட்டு நிறுவனம் மற்றும் கட்டுமான ஒப்பந்த தொழிலகம், ஒன்றினை துவங்கி உள்ளனர். அதன் விரிவுபடுத்தப்பட்ட சேவையாக 'ஹஜ், மற்றும் உம்ரா சேவைகள்' துவங்கப்பட்டு, தற்போது  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 


இது குறித்து  பசீர் அஹமது அவர்கள் கூறுகையில் "உள்ளூரில் தொழில் துவங்க வேண்டும் என்ற ஒரே பேராவலுடன் இந்த தொழிலகத்தை  துவங்கினேன். தற்போது இறைவன் அருளால், நண்பர்களின் பேராதரவோடு வியாபாரம் சிறப்பாக உள்ளது. எங்களிடம் வெளி நாட்டு பயணத்திற்கான ஏர் டிக்கெட், உள்ளூர் சொகுசு பயணத்திற்கான இரயில் முன் பதிவு (குறிப்பாக தட்கல் முறையில் இரயில் பயணத்திற்கான முன் பதிவு), வெளி நாட்டு சுற்றுலா ஏற்பாடுகள், போன்ற பயண ஏற்பாடுகளை  மிகச் சிறப்பாக செய்து தருகிறோம். 

இவை தவிர ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்சன் போன்ற சேவைகளை நல்ல முறையில் செய்து வருகிறோம். இந்த வருடம் முதல் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளை விரிவுபடித்தி உள்ளோம். அனைவரும் எங்கள் வர்த்தக நிறுவனத்திற்கு வருகை தந்து, தங்கள் மேலான ஆதரவினை தர வேண்டும். மேலும் எங்கள் நல்ல பணிகளை நம் நண்பர்களுக்கும் எடுத்துக் கூறி வருகை தர முயற்சிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.




சகோதரர். பசீர் அஹமது அவர்கள் கடந்த 1994 ஆம் வரும் கீழக்கரையிலிருந்து துபாய் சென்று, முதன் முதலாக 'முகவை ரெஸ்டாரன்ட்' என்கிற பெயரில்  உணவகம் திறந்தவர் என்பதும், ETA குழுமமான அல் ஹசீனா ஜுவல்லரியில், பத்தாண்டுகளுக்கு மேலாக விற்பனைப் பிரிவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய வியாபாரம், மென் மேலும் செழித்தோங்க, கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 தொடர்புக்கு : பசீர் அஹமது  - 8012711656 
                            முஜீபுர் ரஹ்மான் - 9715160157
                            ஹாஜா அனீஸ்   - 9840402268