Wednesday, August 7, 2013

கீழக்கரை A.S. டிரேடர்ஸ் நிறுவனத்தின் அமர்க்களமான நோன்புப் பெருநாள் விற்பனை !

கீழக்கரை கோக்கா அஹமது தெருவைச்  சேர்ந்த சகோதரர்கள் கஃபார் கான் மற்றும் வாசீம் கான் (கான் பிரதர்ஸ்) ஆகியோர்கள் இணைந்து, கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் (பீஸா பேக்கரி எதிரில்) 'A.S. டிரேடர்ஸ்' என்ற பெயரில் ஆண்களுக்கான ஆடையகம் மற்றும் மொபைல் போன் மற்றும் அதன் உதிரிப் பாகங்களுககான  விற்பனையகத்தை கடந்த 4  ஆண்டுகளாக, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று திறம்பட நடத்தி வருகின்றனர். இவர்கள் கீழக்கரையின் உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர், 'A.சுல்தான் காக்கா' அவர்களின் புதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து  இதன் உரிமையாளர்களில் ஒருவரான கஃபார் கான் அவர்கள் கூறும் போது "தற்போது நோன்புப் பெருநாள் விற்பனை சிறப்பாக நடை பெற்று வருகிறது. கீழக்கரை நகரில் யாருமே தர முடியாத நியாயமான விலைக்கு, எங்களிடம் 144 பிராண்ட் ஒரிஜினல் கைலிகள், KIBS கைலிகள், பனியன்கள், உள்ளாடை வகைகள், குதிரை மார்க் கைலிகள், பங்களாதேஷ் மற்றும் கேரளா கைலிகள், பனியன்கள் மற்றும் உள்ளாடைகள் போன்றவைகளை விற்பனை செய்து வருகிறோம்.



மேலும் எங்களது நிறுவனத்தில் அனைத்து வகையான சைனா மொபைல்கள் மற்றும் G-Five  மாடல் மொபைல்களை வேறெங்கும் கிடைக்காத உண்மை விலைக்கு விற்பனையாகிறது. இவை தவிர அனைத்து மொபைல் போன்களுக்குரிய உதிரி பாகங்களும் குறைந்த விலையில் கிடைக்கும். எல்லா வகையான போன்களுக்கும் ரீசார்ஜ் செய்து தரப்படுகிறது.


இவை அனைத்திற்கும் முதன்மையாக எங்கள் தந்தையாரின் வழிகாட்டுதலின் படி, தரமான செங்கல் மற்றும் அனைத்து முதல் தரமான சிமெண்டு வகைகளையும் விற்பனை செய்து வருகிறோம். அனைவரும் எங்கள் நிறுவனத்திற்கு வருகை தந்து, தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

A.S. டிரேடர்ஸ் நிறுவனத்தினருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 comments: