Tuesday, August 6, 2013

கீழக்கரையில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'டிசைன் மொபைல்' விற்பனையகம் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி !

கீழக்கரை பழைய குத்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் முஹம்மது ரியாஸ்கான் மற்றும் அமீர் கான் ஆகியோர்கள் இணைந்து,  கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (பாரத ஸ்டேட் வங்கி அருகில்) 'டிசைன் மொபைல்' என்ற பெயரில் மொபைல் போன் மற்றும் அதன் உதிரிப் பாகங்களுககான  விற்பனையகத்தை கடந்த 10 ஆண்டுகளாக திறம்பட நடத்தி வருகின்றனர். இதனால் இதன் வாடிக்கையாளர்கள் பெரும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவே கீழக்கரையில் மொபைல் போன் விற்பனையில் முன்னோடி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து  இதன் உரிமையாளர்களில் ஒருவரான முஹம்மது ரியாஸ் கான் அவர்கள் கூறும் போது "எங்களிடம் NOKIA, SAMSUNG, SONY ERICSSON போன்ற பிராண்டட் மொபைல்களும், அனைத்து வகையான சைனா மொபைல்களும் வேறெங்கும் கிடைக்காத நியாயமான விலையில் கிடைக்கும். மேலும் அனைத்து மொபைல் போன்களுக்குரிய உதிரி பாகங்களும் குறைந்த விலையில் கிடைக்கும். எல்லா வகையான போன்களுக்கும் ரீசார்ஜ் செய்து தரப்படுகிறது.



மேலும் எங்களிடம் 4GB முதல் 16 GB வரையிலான அனைத்து பிராண்டட் பெண் டிரைவுகள், மெமரி கார்டுகள் தரமுடன் கிடைக்கும். இது தவிர கடந்த 4 வருடங்களாக ரம்ஜான், பக்ரீத் பெருநாள் காலங்களில் பங்களாதேஷ், இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லுங்கிகள் மற்றும் சட்டைகள், கல்கத்தா டவல்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று ஆர்வமுடன் தெரிவித்தார்.

இவர்களுடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

                          தொடர்புக்கு : முஹம்மது ரியாஸ் கான் - 98423 62986

No comments:

Post a Comment