Tuesday, September 17, 2013

உயரம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை புரியும் கீழக்கரை மாணவர்! !

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைதெரு பகுதியை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில் (15) இவர் சென்னை பிஷப் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பயின்று வருகிறார். இவரது தந்தை நூஹ் இப்ராஹிம் ஆவார். உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஆர்வமுடைய இவர் ஜீனியர் பிரிவிலான போட்டிகளில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் பங்கேற்று உயரம் தாண்டும் போட்டிகளில் இளம் வயதிலேயே சாதனைகள் படைத்து வருகிறார்.


 
தேசிய அளவில் பெற்ற வெற்றிகள்

2012ம் ஆண்டு கொச்சினில் நடைபெற்ற ஜீனியர் தடகள போட்டியில் 2ம் இடம் பெற்றார். 1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.

2012ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார். 1.83 மீட்டர் உயரம் தாண்டினார்.

2012ம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 3ம் இடம் பெற்றார். 1.88 மீட்டர் உயரம் தாண்டினார்.

2013ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற போட்டியில் 2ம் இடம் பெற்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டினார்.


 
மாநில அளவிலான போட்டிகளில் பெற்ற வெற்றிகள்

 2012ம் ஆண்டில் கிருஸ்ணகிரியில் நடைபெற்ற போட்டிகளில் தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்.

2012-2013ம் ஆண்டுகளில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான விழா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.78 மீட்டர் தாண்டி முதலிடம் பெற்றார்.

2013ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற 28வது ஜீனியர் அளவிலான போட்டியில் 1.98 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்து  முதலிடம் பெற்றார்.


கீழக்கரை நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வரும் மாணவர் முஹம்மது ஆகில், இன்னும் பல உலகளாவிய வெற்றிகளை குவிக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது குறித்து மாணவர்  முஹம்மது ஆகில் கூறியதாவது,

இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும். இறைவன் அருளாளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்,பயிற்சியாளர்கள் தரும் ஊக்கத்தினால் என்னால் இதில் ஈடுபட முடிகிறது. உயரம் தாண்டுதலில் உலக அளவில் நம் நாட்டின் சார்பில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆவல்.

தகவல் மற்றும் படங்கள் : கீழக்கரை டைம்ஸ்

No comments:

Post a Comment