கீழக்கரை கிழக்குத் தெரு முஸ்லீம் பஜாரில் 'பிஸ்மி மளிகை & எலக்ட்ரிகல்ஸ்' என்ற பெயரில் மளிகை கடை மற்றும் எலக்ட்ரிகல்ஸ் விற்பனையகம் ஒன்றினை, மேலத் தெரு மணியார் வெட்டை பகுதியைச் சேர்ந்த பாதுஷா அவர்கள், கடந்த வியாழக்கிழமை (09.08.2012)அன்று துவங்கியுள்ளார். இவர் பல்லாண்டு காலம் நாகூர் அருகே உள்ள வேளாங்கன்னியில் பாதுஷா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாதுஷா அவர்கள் கூறும் போது " எங்களது மளிகை கடையில் அனைத்து மளிகை சாமான்களும் நியாயமான விலையில் கிடைக்கும். இவை தவிர ஸ்டேசனரி பொருள்கள், பிளாஸ்டிக் சாமான்கள், மற்றும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். மேலும் எங்களிடம் அனைத்து விதமான எலக்ட்ரிகல் சாமான்களும் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும். அனைத்து பொருள்களும் தொலைபேசி ஆடர்களின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்தும் தருகிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.
தொடர்புக்கு : பாதுஷா - 76399 01783, கடை - 04567 242853


www.99likes.blogspot.com வலைத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.
ReplyDelete