கீழக்கரை முஸ்லீம் பஜாரில் (வள்ளல் சீதக்காதி லேன் சாலையில்) 'MAX FASHION' என்ற பெயரில் ஆண்களுக்கான பிரத்யேக ஆடையகம் இன்று (26.07.2013) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின்னர் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதனை தெற்குத் தெருவைச் சேர்ந்த நண்பர். அஸ்வத் கரீம் துவங்கியுள்ளார். இந்த புதிய ஷோ ரூமை, SDPI மாவட்ட தலைவர். M.I.நூர் ஜியாவுதீன் அவர்கள் முன்னிலையில், M.M.K.ஜமால் இப்ராஹீம் அவர்கள் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்வின் போது SDPI கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம் : கடை திறப்பாளர். ஜமால் இப்ராஹீம் அவர்களிடமிருந்து விற்பனையை பெற்றுக் கொள்ளும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். பசீர் அஹமது அவர்கள்

திருமணங்கள் போன்ற வீட்டு விசேஷ காலங்களிலும், இராமநாதபுரம் சென்றே ஆடைகள் வாங்க வேண்டிய சூழல் இருந்தது.
அந்த சிரமத்தை போக்கும் வகையில் இப்போது நம் ஊரிலேயே அதற்கான ஷோ ரூமை துவக்கி இருக்கிறோம்.
எங்களிடம் பிராண்டட் சட்டைகள், ஜீன்ஸ் பேண்டுகள், டீ சர்ட்டுகள், இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள், கைலிகள், உள்ளாடைகள், போன்றவை நியாயமான விலையில் கிடைக்கும். மேலும் எங்களிடம் அனைத்து விதமான வெளி நாட்டு சாமான்களும் கிடைக்கும். எங்களின் இந்த புதிய நிறுவனத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.
இவருடைய வியாபாரம் செழிக்க கீழை இளையவன் வலைத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.